18

siruppiddy

ஜூலை 20, 2013

இழுபறி கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் !


வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு இன்று 4 ஆவது நாளகவும் இழுபறி நிலையிலேயே முடிவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு மாவட்டங்களான மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் தெரிவு மற்றும் கட்சிகளுக்கான ஆசனப்பகிர்வுகள் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் தீர்மானிக்கப்படும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு மற்றும், கட்சிகளிற்கு பகிரப்படும் ஆசனங்கள் தொடர்பிலாக 4 ஆவது நாளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு யாழ்.மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இக் கலந்துரையாடலினை முடித்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற கலந்துரையாடிலின் படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்காக கட்சிகளின் ஆசனப் பகிர்வு மற்றும் வேட்பாளர் தெரிவுகளும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கான கட்சிகளின் ஆசனப் பகிர்வு மற்றும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் திடகாத்திடமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. நாளையும் நாங்கள் கூடிப் பேச உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக