சிறிலங்காவில் புனர்வாழ்வு முகாங்களைத்தவிர வேறு சிறைகளிலும் இன்னமும் பொது மக்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பதை இன்று யாழ் வருகைதந்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஒத்துக் கொண்டுள்ளார்.
மேலும் அவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் மிக விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அழிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்த முன்னாள் போராளிகளை யாழ்.கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று காலை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போதே அவர் மேற்படி சிறிலங்கா அரசாங்கத்தின் நயவஞ்சகத்தினையும் போட்டுடைத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
புனர்வாழ்வு அழிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துக் கொண்டவர்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புனர்வாழ்வு அழிக்கப்பட்டவர்களுடைய மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும். ஏனைய மக்கள் அவர்களுக்கான உதவிகளைச் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
இதன் போது அங்கு கூடியிருந்த முன்னாள் போராளிகள் தமக்கு சமூகத்தில் ஏற்படும் சவால்கள், ஏமாற்றங்கள் தொடர்பில் பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர். எனினும் அவ்வாறான பிரச்சிணைகளுக்கு உடனடிப்பதில் ஏதுவும் கூறாத அமைச்சர் மழுப்பலான பத்திலைச் சொல்லியிருந்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக