18

siruppiddy

ஜூலை 11, 2013

அரச வழங்களை பயன்படுத்தி தேர்தல் மோசடியில்


வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் முப்படைகள் மற்றும் அரச வழங்கள் அனைத்தினையும் பயன்படுத்தி தேர்தல் மோசடியில் ஈடுபடத்திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
புணர்வாழ்வு முகாங்களில் இருந்து வெளியேறி சமூகத்துடன் இணைந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்றவர்களை மிரட்டியும் வாக்கு மோசடி செய்ய சிறிலங்கா இராணுவத்தினர் முனைந்து வருகின்றனர்.
சிவில் பாதுகாப்புக் குழுவில் உள்ள 3 ஆயிரம் பேரையும் இணைத்துக் கொண்டு சிறிலங்கா இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுடைய விபரங்களை திரட்டி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வடபுலத்தில் நிலைகொண்டுள்ள சிறிங்கா இராணுவத்தினர் முகாங்களுக்குள் முடக்கப்பட வேண்டும்.
வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றல் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறக் கூடாது, தமிழர்களுடைய ஆளுகைக்குள் வடமாகாணம் சென்றுவிடக்கூடாது என்று பயத்திலேயே சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்துடன் இணைந்து இவ்வாறான செயற்பாடுகளை செய்து வருகின்றது.
மேலும் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒருக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களுக்காக அதிகாரிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 15000 துவிச்சரக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல செயற்பாடுகள் வடமாகாணத்தில் தற்போ நடைபெற்று வருகின்றது.
ஆனாலும் ஜனநாயக ரீதியில் நடைபெறுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சையமாக வெற்றி பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக