மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியாக மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தின்போது தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 50 பேருக்கு இப்புனர்வாழ்வு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பதிகாரி கே.ஜீவா தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த கால போர்ச் சூழலிலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் வவுணதீவு என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக