சுய இலாபங்களுக்ககவும் அரசியல் சலுகைகளுக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவினையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் தீவிர முயற்சிகளில் சரவணபவன்- வித்தியாதரன் கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரத்தியேக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைகளுக்கு கிஞ்சித்தும் வளைந்து கொடுக்காதவரும் ஆளுமையும் மிக்கவரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி வி விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளராக நியமிக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அரசாங்கம் பெரிதும் கலக்கம் அடைந்திருக்கும் அதேவளை, யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி சர்வதிகார இராச்சியத்தை ஏற்படுத்துவதற்கு துடித்துவரும் சரவணபவன்- வித்தியாதரன் கூட்டாளிகளுக்கும் இவரது நியமன முயற்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக, தனது முதலமைச்சர் கனவு பலிக்காத நிலையில், மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கி, வட மாகாண சபை அரசாங்கத்தில் தமது கையை பலப்படுத்தும் தீவிர பிரயத்தனங்களை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் ஒரு நடவடிக்கையாகவே, விக்னேஸ்வரனினது நியமனத்தை தடுக்கும் நோக்கில்இ தமது ஊடக பலத்தை பயன்படுத்திஇ கடந்த சில நாட்களாக விக்னேஸ்வரன் மீது சேறடிக்கும் தீவிர பிரசாரம் ஒன்றை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஸ்வரனினது பலமான யாழ்ப்பாண தொடர்புகளை மறைத்துஇ அவர் கொழும்பை சேர்ந்தவர் என்று ஒரு பிரதேசவாத கருத்தை கிளப்பி விட்டிருப்பதுடன், யாழ்ப்பாண தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்களை வைத்து , தமிழரசு கட்சிக்குள்ளும் தமிழ் தேசிய கட்சிக்குள்ளும் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த சரவணபவன் மற்றும் வித்தியாதரன் ஆகியோர் , யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகைக்கெதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்திருக்கும் மானநஷ்ட வழக்கினை வாபஸ் பெறுவதற்கு உதவுமாறு கூறியதாகவும், இதற்கு மஹிந்த ராஜபக்ஸ முன்வைத்த நிபந்தனைகளை இவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை, திரு.சரவணபவன் மற்றும் திரு.வித்தியாதரன் ஆகியோர் தமது தரப்பு நியாயங்களை தெரியப்படுத்துமிடத்து, அதனை பிரசுரிப்பதற்கு பரிஸ்தமிழ்.கொம் தளம் அமைத்துக்கொடுக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக