வாழைச்சேனை தியாவட்டவானில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட 55 வயதுடைய நபரொருவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து வாழைச்சேனை காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது குறித்த ஏழு வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவ்வீதியால் வந்த 55 வயதுடைய நபரொருவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று அவரின் கையை பிடித்து இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.குறித்த சிறுமி கூச்சலிட்ட சத்தம் கேட்டு வீதியால் சென்ற பொதுமக்கள் மேற்படி நபரைப் பிடித்து வாழைச்சேனை காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக