18

siruppiddy

ஜூலை 15, 2013

பேரவலத்தின் போது தமிழீழத்தில் வேவு பார்த்த றோ ?


ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பில் இந்தியாவுக்கும் தொடர்பிருந்தது என்பது பல்வேறு தரப்பினரதும் வாதம். அதனை, இந்தியாவும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் அல்லது உறுதியாக மறுக்கவில்லை.
இந்த நிலையில் 'மட்ராஸ் கபே' என்ற சர்ச்சைக்குரிய திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது. அதனை மகிந்த ராஜபக்சவுடன் தனிப்பட்ட உறவை பேணும் ஹிந்தி நடிகரான ஜோன் ஏப்ரகீம் தயாரித்துள்ளார்.

இந்தியாவில் ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடையத் தொடங்கியுள்ள இத்தருணத்தில், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் இந்த திரைப்படம் வெளிவரவுள்ளதாக முதற்கட்ட செய்திகள் ஊடாக அறியமுடிகிறது.

முள்ளிவாய்க்கால் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில தங்கியிருந்த றோ அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலுக்கு இணங்கவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக