18

siruppiddy

ஜூலை 12, 2013

திருமலை நிலக்கரி மின் நிலையத்தால் மக்கள் சுமை ஏற்படும்!


திருகோணமலை சம்பூரில் அமைக்கப்படவுள்ள நிலக்கரி மின் நிலையம், காரணமாக நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் பொருளாதார சுமை ஏற்படுமென ஸ்ரீலங்காவின் வட மத்திய மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சந்திம கமகே தெரிவித்தார்.
அந்த நிலையம், 33 சதவீத வினைத்திறனுடன் செயற்படுமென ஆய்வொன்று காட்டுவதாகவும், நிலக்கரி மின் நிலையங்கள் குறைந்தது 40 சதவீத வினைத்திறனை கொண்டிருக்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.
அந்த அனல் மின் நிலையம் கட்டப்பட்டால், ஸ்ரீலங்கா மின்சாரசபைக்கு, ஆண்டுதோறும் 7.63 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுமெனவும், மின் பாவனையாளர்கள் ஒவ்வொருவரும், ஆண்டுதொறும் ஆயிரத்து ஐந்நூற்று இருபத்தைந்து ரூபாவை மேலதிகமாக செலுத்தவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மின் நிலையத்திற்கு பத்தாயிரம் ஏக்கர் காணிகள் தேவைப்படுமெனவும், அதற்காக, ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்கள் இடம்பெயர்க்கப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.இந்தியச் செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக