18

siruppiddy

ஜூலை 31, 2013

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது:

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத காரணத்தினால் வடக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் பிரச்சினை கிடையாது. நாட்டுக்கு பாதகம் ஏற்படக் கூடிய எந்த விடயத்தையும் நான் செய்ய மாட்டேன். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை கூட்ட முடியும். 30 ஆண்டு போரின் பின்னர்...

ஜூலை 29, 2013

தமிழரசுக் கட்சி வேட்புமனுத்தாக்கல்""

  வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக் கட்சி இன்று மதியம் 12 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யும் மூன்றாவது கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. -...

ஜூலை 28, 2013

பு ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு கோதபாய

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தள்ளார். தனிப்பட்ட நலன்களுக்காகவும் அச்சம் காரணமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிலர் உதவிகளை வழங்கி வந்தததாகத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு சில சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், வன்னி யுத்த களத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை இந்தப் பிரச்சாரங்களின் மூலம்...

ஜூலை 27, 2013

தமிழ் மக்கள் சொத்து தனியார் மயமாவதா?

கனடிய  தமிழ் மக்கள் கொதிப்பு தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் குருதி சிந்தி, வியர்வை சிந்தி மக்கள் குழுமமாக தங்கள் பலமாக கனடிய தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களை உருவாக்கினர். அந்தவகையில் உருவாக்கப்பட்டவையே கனடிய தமிழ் வானொலி (CTR), தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR). இவற்றை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் எனக்கருதியவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர். அந்தவகையில் பொறுப்பில் இருந்தவர்;, இருப்பவர்...

ஜூலை 26, 2013

வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் தலையாய கடமை  சர்வதேசத்தினால் உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள...

லட்சம் உறவுகளின் உயிராயுதம்

  குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான 4 சாட்சிகளை விசாரிக்க இருப்பதாகக் கூறி, சென்ற வாரம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது - இலங்கையின் அனுராதபுரம் உயர்நீதிமன்றம். குமாரபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 1996ல் நடந்த படுகொலைகளுக்கு, 2013 வரை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. குமாரபுரம் கிராமம் தான் என்றாலும், மூதூர் - கிளிவெட்டி பிரதான சாலை அதன் வழியாகச் செல்கிறது. அனேகமாக விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள்...

ஜூலை 24, 2013

என்னிடமே கூடிய வேட்பாளர்கள் வடக்கு முதலமைச்சரை

   வடக்கு தேர்தலில்  என்னிடமே கூடிய வேட்பாளர்கள் இருக்கப் போகின்றார்கள். வடக்கு தேர்தலில் ஈபிடிபி சார்பில் போட்டியிட 20 பேருக்கு இடமொதுக்கப்பட்டு உள்ளது. அவ்வகையில் வடக்கிற்கான முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் என்னிடமே இருக்கும். ஜனாதிபதியுடன் பேசி நானே முதலமைச்சரை தெரிவு செய்வேன் என டக்ளஸ் தெரிவித்தார். யாழ்.பொதுசன நூலகத்தல் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு...

ஜூலை 23, 2013

இரத்தக் கறைபடிந்த நாள் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்

1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 30 ஆவது ஆண்டு.  இந்த இனப்படுகொலை அரங்கேறி 30 ஆவது ஆண்டை எட்டியதை முன்னிட்டு பிரிட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் பல்வேறு அனுஷ்டிப்பு நிகழ்வுகள்...

ஜூலை 22, 2013

தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா காவல்துறை சோதனை!!

 தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா காவல்துறை சோதனை யாழ். மாவட்ட செயலகத்தில் காவல்துறை சோதனை சாவடி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபைத் தேர்தல் காலங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற காரணங்களுக்காக யாழ். மாவட்ட செயலகத்தில் காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் வடமாகாண...

இந்த மாத இறுதியில்நவநீதம் பிள்ளை கொழும்புக்கு விஜயம் :

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கூறப்படுகின்றது. அவருடைய வருகை ஒக்டோபர் மாதம் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் முன்கூட்டியே வரக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகை தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தா...

ஜூலை 21, 2013

சிட்னியில் கறுப்பு யூலையும் கரும்புலி நினைவு நாளும்!

இல் அமைந்துள்ள மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழதேசியகொடி அவுஸ்திரேலியா கொடி ஏற்றப்பட்டதுடன் அகவணக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்கள் அணைவரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அடுத்ததாக இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் அஐந்தன் இளங்கோவன் அவர்கள் கரும்புலிகளின் தியாகத்தையும் அவர்களின் சாதனைகள் பற்றியும் இளையோர்களை உள்வாங்கக்கூடிய வகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவரை தொடர்ந்து திரு மயில்வாகனம்...

படையினருக்கே அதிகளவான காணிகள் ஓதுக்கீடு-இடம் பெயர்ந்த ?

   மன்னார் மாவட்டத்தில் உள்ள பல காணிகள் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை அடையாளப்படுத்தும் வகையில் 'இது இராணுவத்தினருக்கு உரிய காணி ' என தமிழ் இஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பெயர் பலகை குறித்த காணிகளினுள் நாட்டப்பட்டுள்ளது. -குறித்த காணிகள் மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி மன்னார் சௌத்பார் பிரதான வீதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.குறித்த காணிகள் பனை மரக்காடுகள் மற்றும் அடர்ந்த காடுகளிலேயே ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளது....

ஜூலை 20, 2013

இழுபறி கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் !

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு இன்று 4 ஆவது நாளகவும் இழுபறி நிலையிலேயே முடிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு மாவட்டங்களான மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் தெரிவு மற்றும் கட்சிகளுக்கான ஆசனப்பகிர்வுகள் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் தீர்மானிக்கப்படும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

ஜூலை 19, 2013

சிறுமி மீது வல்லுறவு தந்தை கைது

பதினொரு வயது நிரம்பிய சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தந்தையை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தனிமையில் சிறுமி வீட்டிலிருந்தபோது மது போதையில் வீடு வந்த தந்தை தன் மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக அப்புத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி, தியத்தலாவை...

ஒன்றும் இல்லாத கழுததைகள் அமைச்சர்கள் ஆகிறார்கள்

 மாகாண சபைத் தேர்தல்களில் சில அமைச்சர்களின் சோற்று பொதிகளுக்காக வாக்குகளை கவரும், கபடத்தனமாக அரசியலை தோற்கடிக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாத்தளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தாய் நாட்டுக்கு அழுத்தங்கள் வரும் போது, குரல் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை.  சிலர் வேலைவாய்ப்புகளை பெற எந்த தகுதியும் இல்லாத நிலையிலேயே அரசியலுக்கு வருகின்றனர். சில அமைச்சர்கள் அரசாங்க பணிகளுக்கு...

படத்தை தடை செய்க தமிழர் கட்சி அமைப்புகள் மாணவர்கள் கோரிக்கை!

 மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாகவும்தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாகவும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாகவும் மனு ஒன்று கையளிக்கப்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு பெரும்திரளாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வெளியாகவிருக்கும் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி...

ஆணையாளரின் அனுமதியை வெளிநாட்டு தூதுவர்கள் பெறவேண்டும்

வெளிநாட்டு தூதுவர்கள் வடமாகாணத்திற்கு செல்வதானால் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் பலர் தேர்தலை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செல்வார்களாயின் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர்கள் தூதுவர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்...

ஜூலை 18, 2013

பாதிப்புற்றோருக்கு 50 இலட்சம் ரூபா இழப்பீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியாக மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டது. வவுணதீவு பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தின்போது தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 50 பேருக்கு இப்புனர்வாழ்வு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பதிகாரி கே.ஜீவா தெரிவித்தார். வவுணதீவு...

ஜூலை 17, 2013

சிறுமி மரணம்: சோகத்தில் இணைய உலகம்

  யுடியூப்பை கலக்கி வந்த அமெரிக்க சிறுமியான டாலியா ஜோய் கெஸ்டலானோ புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் உயிரிழந்த சம்பவமானது இணைய உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 6 வருடங்களாக புற்று நோயுடன் போராடி வந்த 13 வயதான டாலியா ஜோய் கெஸ்டலானோ, ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் தொடர்பாக யுடியூப்பில் காணொளிகளை வெளியிட்டு வந்தார்.{காணொளி} அதன் மூலம் இணைய உலகில் பலராலும் விரும்பப்படும் ஒருவராக திகழ்ந்த அவரது யுடியூப் பக்கமானது 8 இலட்சத்துக்கும் அதிகமான...

ஜூலை 16, 2013

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்! சம்பந்தன் அறிவிப்பு

 வட தமிழீழத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில்...

பிளவை ஏற்படுத்த சரவணபவன்- வித்தியாதரன் கூட்டாளிகள் கடும்

சுய இலாபங்களுக்ககவும் அரசியல் சலுகைகளுக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவினையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் தீவிர முயற்சிகளில் சரவணபவன்- வித்தியாதரன் கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரத்தியேக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகைகளுக்கு கிஞ்சித்தும் வளைந்து கொடுக்காதவரும் ஆளுமையும் மிக்கவரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி வி விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளராக...

ஜூலை 15, 2013

காணாமல் போனவர்களது உறவினர்கள் அமைதி ஊர்வலம்!

 வவுனியா மேல் நீதிமன்றத்தில் காணமல் போனவர்கள் தொடர்பாக இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற வழக்கு விசாரனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணத்தில் காணமல் போனவர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது. குறித்த அமைதி ஊர்வலத்தில் மன்னார் வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணமல் போனவர்களது உறவினர்கள் சுமார் நூற்றுக்கணக்காணவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு முன் ஒன்று திரண்டு குறித்த அமைதி ஊர்வலத்தை...

மீனவர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சக்தியே?

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சக்தியே காரணம் என்று ஸ்ரீலங்காவின் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். எல்லை தாண்டிவந்து மீன்பிடிக்குமாறு தமிழக மீனவர்களைத் தூண்டிவிடுவது மட்டுமன்றி, ஸ்ரீலங்காக் கடற்படையினர் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களையும் சுமத்தி வருவதாக ஸ்ரீலங்காவின் மீன்பிடித்துறை நீரியல் வள பிரதி அமைச்சரான சரத்குமார குணரத்ன குறிப்பிட்டார். மேலும் இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஸ்ரீலங்காவுக்கும்...

பேரவலத்தின் போது தமிழீழத்தில் வேவு பார்த்த றோ ?

ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பில் இந்தியாவுக்கும் தொடர்பிருந்தது என்பது பல்வேறு தரப்பினரதும் வாதம். அதனை, இந்தியாவும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் அல்லது உறுதியாக மறுக்கவில்லை. இந்த நிலையில் 'மட்ராஸ் கபே' என்ற சர்ச்சைக்குரிய திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது. அதனை மகிந்த ராஜபக்சவுடன் தனிப்பட்ட உறவை பேணும் ஹிந்தி நடிகரான ஜோன் ஏப்ரகீம் தயாரித்துள்ளார். இந்தியாவில் ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

ஜூலை 14, 2013

முதலமைச்சருக்கான வேட்பாளரும் -

 வடமாகாண சபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் யார் என்பது பற்றிய முடிவுகள் வெளிவராத ஒரு நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. கிடைக்கப்பெறும் செய்திகளின் படி, மாவை சேனாதிராசாவிற்கும், ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் கூட்டமைப்பு இரண்டு பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழரசுக் கட்சியும் உட்பட கூட்டமைப்பில் உள்ள ஏனைய எல்லாக் கட்சிகளும் மாவை சேனாதிராசாவையே முன்மொழிவதாகத் தெரிகிறது. ஆனால், கட்சித் தலைமையும் சுமந்திரனும் ஓய்வு பெற்ற...

அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது*

 13ம் திருத்தச் சட்டத்தின் காவல்துறை அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இந்திய...

ஜூலை 13, 2013

தேர்தலுக்கா சாவகச்சேரியில் சு.க. அலுவலகம்

    ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசத்திற்கான அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா இந்த அலுவகத்திற்கச் சென்று அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார். வடக்கில் தமிழ்மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க இந்த சுதந்திர கட்சியின் அலுவலகம் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க...

ஜூலை 12, 2013

இடம்பெற்ற பேருந்து விபத்தில் 3 பேர் பலி 18 பேர் காயம்!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பொலனறுவை மன்னம்பிட்டிய பகுதியில் விபத்திற்கு உள்ளானதில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர்களை பயிற்சிக்காக கொழும்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று அதிகாலை பேருந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிக்கொண்டதில் பெண்ணொருவர் உள்ளிட்ட...

காவல்துறையினர் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்!-

- சிறீலங்கா காவல்துறையினர் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறீலங்காவில் ஊழல் மோசடிகள் தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறீலங்காவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக 64 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் மிக மோசமாக ஊழல் மோசடிகள் இடம்பெறும் நிறுவனமாக பொலிஸ் திணைக்களத்தை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.ஊழல் மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள்...

சிறுமிகள் துஷ்பிரயோகம்-சாரதி கைது!

சிறீலங்காவின் தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தின் சாரதியை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அந்த இல்லத்தைச்சேர்ந்த சிறுமிகள் நால்வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுவர் இல்லத்தின் முச்சக்கரவண்டியின் சாரதியான 46 வயதான நபர் மதுபாவனை மற்றும் புகைத்தல் பயன்படுத்துவது தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே குறித்த நபர் சிறுவர் இல்லத்தைச்சேர்ந்த நான்கு...

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறி இன்றும்

வடமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது. இன்றும் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

காந்திகொலை மறுவிசாரணை கோரும் மனு ஒத்திவைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மறு விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் சாந்தகுமரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம்...

85 ஆயிரம் மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில்

வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாது. தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை என்று கபே அமைப்பின் அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். மனித உரிமைகள் நிலையமும் கபே அமைப்பும் இணைந்து நேற்று வியாழக்கிழமை நடத்திய தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறினார்.இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.வடமாகாண சபை தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள...

நாடாளுமன்றத்தின் மற்றுமொரு குழு சிறீலங்கா செல்ல !

 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழு, விரைவில் ஸ்ரீலங்கா செல்லுமென தெரிவிக்கப்படுகிறது. பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு இரண்டு வாரங்களில் இலங்கை வருமென ஸ்ரீலங்கா தொழிலாளர் கொங்கிரஸை சேர்ந்த அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். சோனியா காந்தியுடன் அண்மையில் தாம் நடத்திய சந்திப்பின்போது, மலையக பகுதியில் இடம்பெறவுள்ள வீடமைப்புத் திட்டம் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வார்களென தீர்மானிக்கப்பட்டதென...

திருமலை நிலக்கரி மின் நிலையத்தால் மக்கள் சுமை ஏற்படும்!

திருகோணமலை சம்பூரில் அமைக்கப்படவுள்ள நிலக்கரி மின் நிலையம், காரணமாக நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் பொருளாதார சுமை ஏற்படுமென ஸ்ரீலங்காவின் வட மத்திய மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சந்திம கமகே தெரிவித்தார். அந்த நிலையம், 33 சதவீத வினைத்திறனுடன் செயற்படுமென ஆய்வொன்று காட்டுவதாகவும், நிலக்கரி மின் நிலையங்கள் குறைந்தது 40 சதவீத வினைத்திறனை கொண்டிருக்கவேண்டுமெனவும் அவர் கூறினார். அந்த அனல் மின் நிலையம் கட்டப்பட்டால், ஸ்ரீலங்கா மின்சாரசபைக்கு,...

ஜூலை 11, 2013

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் - ?

13வது அரசியல் அமைப்புத் திருத்தம் - சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் - கெஹெலிய  3வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டால்,  சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் என  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

அரச வழங்களை பயன்படுத்தி தேர்தல் மோசடியில்

வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் முப்படைகள் மற்றும் அரச வழங்கள் அனைத்தினையும் பயன்படுத்தி தேர்தல் மோசடியில் ஈடுபடத்திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். புணர்வாழ்வு முகாங்களில் இருந்து வெளியேறி சமூகத்துடன் இணைந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்றவர்களை மிரட்டியும் வாக்கு மோசடி செய்ய சிறிலங்கா இராணுவத்தினர் முனைந்து வருகின்றனர். சிவில்...

கடற்றொழிளார் உண்ணா விரதப்போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களை வெளியேற்ற வலியுறுத்தி மாவட்டக் கடற்றொழிலாளர் சமாசத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட உண்ணா விரதப்போராட்டம் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றவேண்டும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைக் கட்டுப்படுத்தப்படவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை...